Wednesday, August 24, 2016

[Piravakam] Re: [வல்லமை] Re: [MinTamil] அஷ்டசாசிரம் = எண்ணாயிரம் ~ காளமேகத்தின் ஊர்

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஐந்து நெடிலில் தொடங்கும் வார்த்தைகளும் உதாரணம் தரலாம்.

 

சா- > ஆ- காட்டுகள்:

(1)   சாயிரம் > ஆயிரம்

(2)   சாடா/சாடீ (வடசொல்) > ஆடை 'dress in Tamil'. Cf. saree in English from IA.

(3)   சாய்தல் – வளைதல். சாய்வம் > சாவம் 'வில்' > ஆவம் 

சாவம் சாபம் என்று தமிழ்ச்சொல் வடசொல் ஆகிறது. கோவணம்/கோமணம் > கோபன- கௌபீனம் என வடசொல் ஆகும்போதும் தமிழின் –வ- -ப- ஆகிறது. ஹைப்பர்கரெக்‌ஷன்.

 

சீ- > ஈ- காட்டுகள்:

(1)   சீந்து > ஈந்து (= ஈங்கு, ஈஞ்சு). சீ- = Date palm tree. சீழம் > ஈழம், சீந்து : சிந்து (நதி/நிலம்). Cf. ப்ராகிருதம், கூர்மம்:கும்மம். கீர்ண:கிண்ண, …

 

சூ- > ஊ- காட்டுகள்:

(1)   சூழ்- > ஊழ். ஒருவனைச் சூழும் விதி.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள்).

கன்னடத்தில் சூழ்- என்றால் காலம், பருவம், பருவச் சுழற்சி. ஊழி = யுகம்.

 

இந்த Fate, Karma என்று பொருள்படும் ஊழினின்றும்

மூழ்- > ஊழ்- கிழடு ஆதல், முதிர்ந்து வெடித்தல் (உழுந்துப் பயிர்) வேறு சொல்.

 

சே- > ஏ- காட்டுகள்:

(1)    சேண்- > ஏணி (ச்ரேணி)

(2)   சேமம் > ஏமம்

(3)   சேர்- > ஏர்  'கலப்பை உழவு' (Cf. செல் கெழு குட்டுவன். கெல் இரும்பொறை – சங்கச் சேரர் காசுகளில். செல்லாயி – உழவர் குலதெய்வம். சேரன் – நாஞ்சில் படை பலராமன் கலப்பை கொண்டவன். பனை மரத்தடியில் கட்கிண்ணம் வைத்திருப்பவன். கல் 'stone' என்பதும் கெல்லு- > கல்லு-, கலப்பை என்பதும் வேறான தாதுக்கள் எனலாம்.)


சோ- > ஓ- காட்டுகள்:

(1)   சோணம் > ஓணம் (நக்ஷத்ரம்).

ஸ்ராவணம் > ஸ்ரோணம் > சோணம் > ஓணம்.

( Cf. ஸ்வஸ்திகம் > சோத்திகம் )

 

இன்னும் பல இருக்கும். 


நா. கணேசன்

 

குறில் காட்டுகள்:

சுவணம் (சுபர்ண) > உவணம்

சிறை > இறை

சிறகு > இறகு

சுலவு > உலவு

சுருள் > உருள்

சுழல் > உழல்

சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)

https://groups.google.com/d/msg/mintamil/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ

சமை > அமை

சுளுக்கு > உளுக்கு

சிப்பி > இப்பி

சமணர் > அமணர்

சமர் > அமர்

சிமை > இமை (சிமையம் > இமையம்)

சிமிழ் > இமிழ்

 

 


On Wednesday, August 24, 2016 at 6:51:18 AM UTC-7, N. Ganesan wrote:
அயிர் என்னும் மணலுக்கும் ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. ஸஹஸ்ர > ஸாயிர > ஆயிர. 

ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியர் கருத்துக்களும் நான் அனுப்பிய மடலும்:
On Sun, Aug 21, 2016 at 9:45 PM, Radhakrishna Warrier <radwarrier@hotmail.com> wrote:
Would be interesting to know what other words ancient Tamil (as in the Sangam classics) uses for thousand besides āyiram.  Also, what are the words used in ancient Tamil for lakh, crore etc.?
 

I think Jainism had an impact on using IA saayira/saasira/aayiram in Karnataka and Tamizakam for 1000. Only aayiram and Sanskrit words written as cakaciram (Post-Sangam) are found in Tamil. There is a group of Brahmins called aSTasahasram, with their main town, eNNAyiram gifted by Later Chola kings. Agricultural scientist M.S. Swaminathan, Sangam texts editor UVS, ... belong to this branch. Like Kannada saasira for 1000, aSTa-sahasram is called aSTa-cAciram in Tamil. Since cAciram '1000' gets forgotten, nowadays people make it into aSTa-caasthram too :)

Starting from PaavaaNar, people in Tamil e-lists connect ayir "fine sand" to aayiram and add s- word-initially and try to derive sahasra/saasira from Tamil! This is impossible as saayira/saasira > aayiram are related words. How come s- gets added, why not other consonants like m-, n-, v-, y-, k- ...? Instead of "sand", if at all Tamil had a native word for 1000, it may have been related to viyal/vEl as Telugu has that word.

V. Blažek, Dravidian Numerals, 2009
" Telugu vēyi, veyi, veyyi, pl. vēlu "1000", vēna-vēlu "thousands by thousands".
 Derived from a Proto-Dravidian root, attested in such forms as Tamil viyam "extensiveness, height", viyal "greatness, width, expansion", viyaṉ "greatness, vastness, excellence", Malayalam viyam "extension", Gondi weeya "high" ([DEDR: 5404]).

N. Ganesan
 
Also interesting to know would be the word for thousand in Sinhala, an Indo Aryan language that was not as much influenced by Persian as the north Indian languages.
 
Thanks and regards,
Radhakrishna Warrier
 



On Sun, Aug 21, 2016 at 6:10 PM, N. Ganesan <naa.ganesan@gmail.com> wrote:

Madras Tamil Lexicon gives

ஆயிரம் āyiramn. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:6529.tamillex.2422057

This info is mentioned by Th. Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. Bh.K. mentions this also in pg. 266, The Dravidian Languages (2003):

"The languages of South Dravidian I have borrowed the word for 'thousand' from Prakrit sāsira (< sahasira- < Skt. sahasra-): Ta. Ma. āyiram, Ko.  āire (for loss of s- see section 4.5.1.3), Ko. cāvrm, To. sōfer, Ka. sāvira, sāsira, Tu. sāvira, sāra [DEDR, Appendix11]. Numerals higher than a thousand, like laka 'hundred thousand' and kōṭi 'a crore, 100 lakhs', are borrowed into all the literary languages from Sanskrit."

In pg. 471, BhK talks about the native term, wEyi for 1000, and the different stages of borrowing sahasra fron I-A in non-Telugu southern languages.

In all these three reference works on Dravidian languages, the cognate given for Tamil's aayiram in Kannada is sāvira. I think this is modern Kannada, while we have a closer form, sāyira in old Kannada. See Kittel's dictionary:

ಸಾಯಿರ sāyira. Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).

[ISO 15919]:

sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 

Adding the data on saayira in Kannada for aayiram in Tamil will be more direct than Ka. saavira. There are 3 instances of saayira in old Kannada inscriptions that are in Epigraphica Carnatica volumes. https://www.google.com/search?tbm=bks&q=s%C4%81yira

There must be more. Collecting all examples of sāyira in old Kannada inscriptions will help in understanding how Tamil aayiram gets formed. Some thing like samaNar > amaNar for Jains, a religion coming to Tamizhakam from Kannada country.

 

N. Ganesan





எண்ணுப் பெயர்களில் ஆயிரம்/ஸஹஸ்ர என்றால் பற்பல எண்கள், அதாவது பேரெண் என்று ஒரு பொருளுண்டு என்பதறிவேன்.
அதே போல், நீட்டல்/தூர அளவையில் காவதம்/காதம் என்றால் ஒரு காவதம் என்ற பொருள் தவிர, பற்பல காவதங்கள் என்ற பொருளுமுண்டு.
இதனை, அழகாக இளங்கோ அடிகள் ஆள்கிறார். பல புராணங்களிலும் காவதம் என்றால் நெடிய தொலைவில் உள்ள ஊர்களுக்கு
வருகின்றது. ஜைநநாடாகிய கல்நாட்டில் வடபெருங்கோடு (மேற்குத்தொடர்ச்சிமலை) உள்ள தவப்பள்ளியில் கவுந்தி அடிகளைக்
காண்கின்றனர் கண்ணகி-கோவலன் தம்பதியர். அது மதுரைக்கு வடக்கே 30 காத தொலைவு. இருபொருள் பட
கோவலன் மறைவாக கண்ணகிக்குச் சொல்கிறான். சுமார் 360 மைல் போகணும் என்கிறான். கவுந்தியின் கன்னாட்டுப் பள்ளியை
அடைதல் நெடுந்தொலைவு. வடபெருங்கோட்டில் இருப்பது. அதனைக் காவதம் = நெடுந்தொலைவு என்ற சொல்லால் குறித்தார் அடிகள்.
ஸஹஸ்ர > ஆயிரம் என்றால் பெரிய எண் என்பதுபோல, காவதம் என்றால் பெரிய தூரம் என்று குறித்தார் கவுந்தியடிகளின்
தவச்சாலையை. கர்நாடகாவின் ஜைனக் குரத்தியார் கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்ரம் இளங்கோவுக்கு தன் ஜைந சமயம்
பரப்பத் தேவையாய் இருந்தது. பின் தெற்கு நோக்கி வரும்போது காவிரி நாட்டு வளம் பாடி, சீரங்க பட்டினத்தில், கர்நாடகாவின்
தென்கோடியில் அந்த சாரணரை விண்ணில் இருந்து இறக்கி ஜைந ஸமய போதனை அருளுகிறார் அடிகள்.

ஆயிரம் = அனந்தம், பெரிய எண். காவதம் = பெரிய தொலைதூரம். அறிவேன்.

நா. கணேசன்

--
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

0 comments:

Post a Comment