அன்பு விஜி !
நட்பு!
இந்த சொல் மனிதனின் அத்தனை உறவுகளின் தன்மையை, இயல்பை, உணர்வை, தகுதியை, உரிமையை சட்டை செய்யாமல், அத்தனை உறவுகளுக்கும் எந்தவிதத்திலும் குறைச்சலில்லாமல் ஆழமாக வேரூன்றிவிடும் பக்குவமும் தகுதியும் உடையது.இன்றுவரை மனம் திறந்து எனது சொந்தவிசயங்களை கூட பகிர்ந்து கொள்ளுமளவுக்கு இணையம் ஒரு தோழமையை தந்திருக்கிறது என்றால் அது நீங்களாகத் தான் இருக்க முடியும்.
பல விசயங்களில் "சுவாவா? ம்ம்கூம் சுவா நிச்சயமாக அதை சொல்லியிருக்க மாட்டாள்; இல்லவே இல்லை சுவாதி இதற்கு இடம் கொடுக்கவே மாட்டாள். சுவாதி இந்த விசயத்தில் இப்படி இப்படி தான் பதில் சொல்வாள்.இப்படித் தான் ரியாக்ட் பண்ணுவாள் " என்று ஆணித்தரமாக என்னையிட்டு எங்கும் கருத்து வெளியிட தகுதியான ஒரு ஆழமான புரிந்துணர்வு உங்களிடம். என்னை மட்டுமல்ல சந்திக்கும் ஒவ்வொருவரையும் சரியாக கணிக்கும் திறமை இருக்கிறது. அதே போல் நான் உங்களை சரியாக புரிந்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாது...ஆனால் விஜி உங்களுடைய கலப்பிடமில்லாத அன்பையும் நட்பையும் முழுவதுமாக பெற்றிருப்பதில் மிகவும் சந்தோசமும் பெருமையும் எனக்குண்டு.
எந்தவித பலனும் எதிர்பாராமல் எந்த திசையின் பயமும் உறுத்தாத மென்மையான சிறகுகளை படபடக்கும் பறவையின் தைரியமும், இலக்கும் கொண்ட நட்பை வளர்க்கும் எங்கள் விஜிக்கு இன்று பிறந்தநாள். என் இனிய தோழி, அன்புக்குரிய சகோதரி விஜிக்கு இந்த நன்னாளில் எங்கள் மனம் நிறைந்த நல்வாழ்துகள்!இனிய தமிழின் பெருமையும், புலமையும், வளமையும், நிலைத்த தன்மையும் போல் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
உங்கள்
சிநேகன் அண்ணா , சுவா
அஷ்வத்தாமா & அச்சுதன்.
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
Piravakam@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


0 comments:
Post a Comment