Friday, August 26, 2016

Re: [Piravakam] அன்பு விஜிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். !!!

ஆழ்மனதில் உள்ளதை அள்ளி விதைத்த, விதைக்கவைத்த எம்சகோக்களுக்கு வாழ்த்துகள்  , 

2016-08-26 18:06 GMT+05:30 Swathi Swamy <mswathi1065@gmail.com>:
 

அன்பு விஜி ! 
 
நட்பு!

இந்த சொல்  மனிதனின் அத்தனை உறவுகளின் தன்மையை, இயல்பை, உணர்வை, தகுதியை, உரிமையை சட்டை செய்யாமல், அத்தனை உறவுகளுக்கும் எந்தவிதத்திலும் குறைச்சலில்லாமல் ஆழமாக வேரூன்றிவிடும் பக்குவமும் தகுதியும் உடையது.

பள்ளித் தோழிகள் என்னும் போது  படிக்கும் போது தொடங்கிய உறவு..தினமும் சந்தித்து, அடிச்சு பிடிச்சு விளையாடி வளர்த்த தோழமை அது...!

ஆனால் இணையம் வளரத் தொடங்கிய பின் நவீன தொழில் நுட்பம்  வளர்த்து வரும் முகம் பாராமல்  உருவாகும் அறிமுகங்கள் ஒரு சில கால இடைவெளிக்குள் நெருக்கமான நட்பாகிவிடுவது என்னைப் பொறுத்தவரை ஒரு வரம் தான்.   அறிமுகமாகும் ஆயிரக் கணக்கான இணைய அறிமுகங்களில்  ஒரு சிலரின் எழுத்துகளின் முகங்கள் , கருத்துகளின் தாக்கம் அவர்களிடம் நம்மை அறியாமலே ஒரு ஈர்ப்பை எழுப்பி ஆருமே நினைத்துப் பாராத வகையில் இறுக்கமான நட்பாக வளர்ந்து  வேரூன்றிவிடுகிறது. அப்படி எனக்கும்  ஒரு சிலர் வரமாக வாய்த்திருக்கிறார்கள். அவர்களில் விஜி நீங்கள் ஒரு படி அதிகமாகி தோழியாகவும், சகோதரியாகவும் அதே நேரம் பலவிசயங்களில் ஒரு ஆசிரியையாகவும் இருக்கும் ஒரு அருமையான உறவு.  

 
இன்றுவரை மனம் திறந்து எனது சொந்தவிசயங்களை கூட பகிர்ந்து கொள்ளுமளவுக்கு  இணையம் ஒரு தோழமையை தந்திருக்கிறது என்றால் அது நீங்களாகத் தான் இருக்க முடியும். 
 
பல விசயங்களில் "சுவாவா? ம்ம்கூம் சுவா நிச்சயமாக அதை சொல்லியிருக்க மாட்டாள்; இல்லவே இல்லை சுவாதி இதற்கு இடம் கொடுக்கவே மாட்டாள். சுவாதி இந்த விசயத்தில் இப்படி இப்படி தான் பதில் சொல்வாள்.இப்படித் தான் ரியாக்ட் பண்ணுவாள் " என்று ஆணித்தரமாக என்னையிட்டு  எங்கும் கருத்து வெளியிட தகுதியான ஒரு ஆழமான புரிந்துணர்வு உங்களிடம். என்னை மட்டுமல்ல சந்திக்கும் ஒவ்வொருவரையும் சரியாக கணிக்கும் திறமை  இருக்கிறது. அதே போல் நான் உங்களை சரியாக புரிந்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாது...ஆனால் விஜி உங்களுடைய  கலப்பிடமில்லாத அன்பையும் நட்பையும் முழுவதுமாக பெற்றிருப்பதில் மிகவும் சந்தோசமும் பெருமையும் எனக்குண்டு.

 

எந்தவித பலனும் எதிர்பாராமல் எந்த திசையின் பயமும் உறுத்தாத மென்மையான சிறகுகளை படபடக்கும் பறவையின் தைரியமும், இலக்கும் கொண்ட நட்பை வளர்க்கும் எங்கள் விஜிக்கு இன்று பிறந்தநாள். என் இனிய தோழி, அன்புக்குரிய சகோதரி விஜிக்கு இந்த நன்னாளில் எங்கள் மனம் நிறைந்த நல்வாழ்துகள்!

இனிய தமிழின் பெருமையும், புலமையும், வளமையும், நிலைத்த தன்மையும் போல் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.




அன்புடன்
உங்கள்
சிநேகன் அண்ணா , சுவா
அஷ்வத்தாமா & அச்சுதன்.

--
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        "இனியாவது செய்வோம்" - துரை.ந.உ         
வெண்பா  : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Piravakam@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

0 comments:

Post a Comment