On Friday, August 26, 2016 at 11:20:33 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
வாழ்க! வாழ்க! திரு வி.க !=========================================ருத்ரா
அருமை! எல்லிஸ் (பழைய திருவள்ளுவர் வடிவம் எது?- என நமக்கெல்லாம் காட்டிய தமிழறிஞர்), கால்ட்வெல், பெ. சுந்தரம்பிள்ளை, ...
எல்லோரும் கால்கோள் பாரத மணித்திரு நாட்டில் தமிழ்/த்ராவிட மொழிகளின் ஆழத்துக்கும், வரலாற்றுப் பங்களிப்புக்கும்.
அதனைத் தமிழிலே ஒரு புத்தியக்கமாக ஒரு புரட்சியை தவத்திரு. மறைமலை அடிகள் தோன்றச்செய்தார். அதுவரை வேறுவழியில்
பஜனை பாடிக்கொண்டிருந்த பண்டிதர் பாரதிதாசன் தனித்தமிழ் இயக்கத்தைச் சார்ந்து புதியதோர் உலகத்தை தமிழிலே மலரச்செய்தார்.
திரு. வி. க. மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் பண்டித நடையைப் பழகுதமிழ் ஆக்கி தொழிலாளர் இயக்கம், காங்கிரசு,
பத்திரிகை உலகம் என்று பரப்பினார். பழகுதமிழைப் இதழியலிலே புழங்கச் செய்த பெருமான் திரு. வி. க. புகழ் ஓங்குக!
இன்றைய இளைஞர் பலரும் திரு.வி.க கட்டுரைகளைப் படிக்க வேண்டும். த.ம.அ. நூலகத்தில் பல நூல்கள் உள.
திரு. வி. க. நூல்கள், கட்டுரைகள், பாரதி, பாரதிதாசன், .... என முக்கிய எழுத்தாளர்கள் படைப்புகளையே இணையத்தில்
ஏற்றாமல் தமிழ்நாட்டு அரசு இருக்கிறதே.
பேரா. மு. இளங்கோவன் மேலப்பாதி கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் திரு.வி.க. பெயரில் நூலகம் நடத்துவதை எழுதியுள்ளார்,
தமிழர்கள் பலரும் மறந்துவிட்ட திரு.வி.க. இன்றும் மேலப்பாதியில் தமிழாக வாழ்கிறார்
அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: தமிழ்த் தென்றல் திரு.வி.க
ஹாங்காங் இலக்கிய வட்டம், அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்:
இன்றைய பத்திரிகையாளர் பலருக்கும் ஒற்று தெரிவதில்லை. தமிழிலும் பல பிழைகள். திரு. வி. க. நூல்களைப் படித்தார்களானால்
சிறப்புறுவர் என்பது திண்ணம்.
நா. கணேசன்
தமிழென்றால் புழுக்கம் என்றுமுகஞ்சுழித்த நாட்களுண்டு.தமிழ் கசந்து போனவர்கள்சமக்கிருத குழிவிழுந்துகாணாமல் போனதனால்இருண்ட கண்டம் போலமிரண்டு நாம் கிடந்த போதுஇன் தமிழ்த் தென்றலெனநன் தமிழ் தந்த மகன்தமிழ்த்தாய் தந்த மகன்திரு.வி.க என்ற ஒளிதிகழ்ந்தது நாம் கண்டோமே.அவ் வழகுத் தமிழ் முகம் பார்க்ககண்ணாடிகள் வேண்டுமென்றால்மு.வ என்ற தமிழின் சோலைகல்கி என்ற எழுத்தின் கடல்என்றெல்லாம் நமக்குஎத்தனை பேர்? எத்தனை பேர்?தொழிலாளர் உரிமைக்குகுரல் தந்த செங்கீரன் நம்திரு வி க என்றாலேமிகையில்லை மிகையில்லை!தமிழுக்கும் அமுதென்றபேர் மட்டும் இல்லைவேர்வைக்கடல் கூட இங்குதமிழ் ஆகும்த!தமிழ் ஆகும்!மனித உழைப்பின்உயர் வேதம் காட்டியஉத்தமரே அவர் ஆகும்..அந்ததமிழ்த்தோழர் காட்டும் வழிதயக்கம் இன்றி நடப்போமே!வாழ்க திரு.வி.க!வெல்க எல்லாம் இங்குஅவர் தமிழே!அவர் தமிழே!வாழ்த்துகின்றோம்...நாம்வணக்கத்துடன் அவரை என்றும்வாழ்த்துகின்றோம் நாம்.===============================================
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
Piravakam@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
0 comments:
Post a Comment