மூலப் பிரதி pdf ஆக இணைக்கபட்டுள்ளது.
பாமினி யிலிருந்து யுனிகோட்டுக்கு மாற்றிய பிரதி பின்வரும் பந்திகளில்...
.
பாராளுமன்ற உரை
ගරුරාජවරෝදියම්සම්පන්දන්මහතා (විරුද්ධපාර්ශ්වයේනායකතුමා)
(மாண்புமிகுராஜவரோதயம்சம்பந்தன் - எதிர்க்கட்சிமுதல்வர்)
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ளடங்கியிருக்கும் பல மோசமான ஏற்பாடுகள் காரணமாக அச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம்
ஆயுதப் போரட்டத்திலிருந்து தோன்றிய பல்வேறு குற்றங்களுகக்காக சொல்லப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் பல தமிழர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து இப்போது ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பெருமளவு காலம் கடந்துவிட்டபோதிலும் தடுப்புக் காவலிலுள்ள இந்தத் தமிழ் கைதிகளின்; பிரச்சனைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்பதோடு, பலர் நீண்ட காலம் தடுப்புக்காவலில் உள்ளனர். இக் கைதிகள் தமது விடுதலையைக்கோரி காலத்திற்குக் காலம் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
அதைவிடத் தீவிர குற்றங்களுக்காக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்க வேண்டிய வேறு பலர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாத அதேவேளை, இன்னும் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைக் காலத்திலும் நடந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு மற்றும் 1988 -89 ஆண்டு புரட்சிகளின் பின்னரும் நடந்துள்ளது. தடுப்புக் காவலிலுள்ள கைதிகள் தாம் நடத்தப்படும் விதம் பக்கச்சார்பானதென்றும் சமமற்றதென்றும் உண்மையாகவே முறையிடுகின்றனர். இவ்வாறாக, சட்டத்தின்கீழ் சமமாக நடத்துதல் அவர்கள் விடயத்தில் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டைக் கூறுவதும் சொல்லப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதும் கட்டாயமாகும். அவர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருப்பது அவர்களது குடும்பங்களுக்கு அளப்பபரிய துன்பங்களையும் தொல்லைகளையும் ஏற்படுத்துவNதூடு, நல்லிணக்க நடைமுறைக்கும் தடையாக அமைகிறது. இக்கைதிகளின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எவ்வித உணர்வுமற்றிருப்பதாகவே பார்க்கப்படுகிறது."
இது நீண்ட காலமாக நிலுவையிலுள்ள ஒரு விடயம் என்பது இந்தச் சபை அறிந்த ஓர் உண்மையாகும். இது மேதகு சனாதிபதி அவர்களுடன் நாங்கள் கலந்துரையாடிய ஒரு விடயமென்பதோடு, இவ்விடயந் தொடர்பான அவரது கருத்துக்கள் எப்போதும் நேரியதாகவே உள்ளன. இந்த விடயந் தொடர்பாக நாங்கள் கௌரவ பிரதம மந்திரி அவர்களுடனும் கலந்துரையாடியிருக்கிறோம்;. இவ்விடயந் தொடர்பான அவரது கருத்துக்களும்; எப்போதும் நேரியதாகவே உள்ளன. முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சில சிரமங்கள் நிலவியதாகத் தோன்றியது. தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் மாற்றமொன்று நிலவுகிறது. இந்த விடயத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய அதிகாரபீடத்தின் மூன்றாவது நபர் கௌரவ நீதி அமைச்சராவார். அவருடன் நாங்கள் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அவர் எதிர்மறையானவாராக இருக்கவில்லை. எனினும், அவர் மேற்கொண்ட நடவடிக்கை இந்த பிரச்சினைக்கு விரும்பத்தக்க விளைவுகளை கொண்டு வருவதற்குப் போதுமானதாக இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.
ஐயா, இந்த விடயந் தொடர்பாக ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்;மானமொன்றை அடைவதில் உள்ள தடைதான் என்ன என்பதை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம். மேதகு சனாதிபதி அவர்கள் தன்னைத் தாக்க வந்தவரை மன்னித்து விட்டார்;. அந்த மனிதருக்கு விடுதலை வழங்கப்பட்டுவிட்டது. அது உண்மையிலேயே அவரது சிந்தனைப் போக்கை எடுத்துக்காட்டுகிறது.
ஏனையவர்கள் ஏன் வேறுவிதமாக நடத்தப்படப்படவேண்டும் என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். (ஆயுத) முரண்பாடு முடிவடைந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. நீண்ட காலமாக மக்கள் தடுப்புக் காவலில் உள்ளனர்;. சிலர் ஏறத்தாழ 10 - 15 வருடங்கள் உள்ளனர். அவர்களின் விடுதலைக்கான ஒரு நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஒரு தீய சட்டமென்பதும் எனவே அது நீக்கப்பட வேண்டுமென்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஐயா, ஜெனீவாவில் நடைபொற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட ஒரு சில விடயங்களை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 2015 ஒக்டோபர் 1 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 12வது பந்தி கூறுவதாவது, மேற்கோள்:
"பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்து அதனை அகற்றுவதோடு, தற்கால சர்வதேச மிகச் சிறந்த வழக்கங்களுக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கெதிரான சட்டமொன்றைக் கொண்டு அதனை பதிலீடு செய்வதற்குமான இலங்கை அரசாங்கத்தின் பற்றுறுதியை (இத்தீர்மானம்ஃஇப்பேரவை? ) வரவேற்கிறது"
எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு வாக்குறுதி வழங்கியுள்ளது. ஏன்? ஏனெனில், அச் சட்டம் தீமையானது. அதன்கீழ் நியாயமானதொரு விசாரணை நடைபெற முடியாத ஏற்பாடுகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் இயற்கை நீதியின் விதிகளை உறுதிப்படுத்த முடியாது. அதனால்தான் இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளது.
அண்மையில், 2016 ஜூன் மாதம் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அறி;க்கையொன்றை விடுத்தார். அதில் அவர் என்ன கூறினார்? அவர் கூறினார்: "பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய பாதுகாப்பு தொடர்பான கைதிகளின் தலைவிதி தமிழ் சமூகத்தினருக்கு ஒரு பெருங் கவலையாகவே உள்ளது."
டிசெம்பர் 2015 இல், குற்றச் சாட்டுகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பேரை அரசாங்கம் பிணையில் விடுவித்தது. எனினும், ஏறத்தாழ 250 கைதிகள் இன்னமும் தடுப்புக் காவலில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களுள் 117 பேருக்கெதிராக அரசாங்கம் குற்றப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதோடு, விசாரணைகளைத் துரிதப்பபடுத்துமுகமாக ஜனவரியில் ஒரு விசேட மேல்நீதிமன்ற பெஞ்சை உருவாக்கியது. மார்ச் மாத இறுதிக்குள் சட்டமா அதிபர் திணைக்களம் தீர்ப்ப்புகளை வழங்கும் என்று அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. எனினும் இந்த வருடம் மேலும் எந்தக் குற்றச்சாட்டுக்களோ அல்லது விடுவிப்புகளோ இடம்பெறவில்லை. இந்த நிலைமை சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் வேதனைமிக்கது மட்டுமல்ல, (அவர்களுள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்), தமிழ் கட்சிகள் மத்தியிலும் பரவலாக தமிழ் சமூகத்திலும் வளரும் அதிருப்தியின் ஓர் உறைவிடமாகவும் அமைகிறது.
2016 பெப்ரவரி மாதம் தான் மேற்கொண்ட விஜயத்தின் இறுதியில் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு தொடர்புபட்ட எஞ்சியிருக்கும் கைதிகளுக்கெதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான அல்லது அவர்களை விடுதலை செய்வதற்கான வழிமுறையொன்றைத் துரிதமாகக் காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, மனித உரிமைகள் பேரவையும் உயர் ஸ்தானிகரும் கூட இக்கைதிகளின் நிலைமை தொடர்பாக பெரும் கவலையை மிகத் தெளிவாக வெளியிட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது வெறுமனே கைதிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி, தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் கவலையளிக்கும் ஒரு விடயமாகும் என்று அவர்கள் கூறுகின்றனர். மனித உரிமைகளுக்கான
ஐ.நா. உயர் ஸ்தானிகர் இவ்வரசியல் கட்சிகள் இவ்விடயத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் ஆகியோரிடத்தில் எடுத்தியம்பியிருப்பது மாத்திரமின்றி, இந்த மேலான சபையிலும் பல தடவைகள் எழுப்பியுள்ளன என்பதை ஸ்தானிகர் அறிவார்.
ஜூன் 2016 இல் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விடுக்கப்;பட்ட அறிக்கையொன்றும் உள்ளது. அதில் அவர் கூறினார், "; மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளல் ஆகியவற்றுக்கான இலங்கையின் கடப்பாடுகளுக்கும் பற்றுறுதிக்கும் அமைவாக, மிகவும் விமர்சனத்திற்குள்ளானதும் து~;பிரயோகம் செய்யப்பட்டதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிப் பிரதியீடு செய்யும் பயங்கரவாதத்திற்கெதிரான புதியதொரு சட்டத்திற்கான முதலாவது நகலிற்கு ஒரு குழு தற்போது இறுதி வடிவம் கொடுத்து வருகிறது." இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை "மிகவும் விமர்சிக்கப்பட்டதும் து~;பிரயோகம் செய்யப்பட்டதுமான சட்டம்" என்;று வர்ணித்துள்ளது. இதனை அவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன், தான் விடுத்த அறிக்கையில் கூறினார்.
அத்தகைய சட்டமொன்றின் கீழ் எவ்வாறு எவரையும் சட்டபூர்வமான தடுப்புக் காவலில் வைத்திருக்கமுடியம்? நான் அந்தக் கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அது நீங்கள் தீமையானது என்று கூறுகின்ற ஒரு சட்டமாகும். அது வெறுமனே இந்த நாட்டு மக்களினால் மட்டுமன்றி, சர்வதேச சமூகம் மற்றும் அனைவரினாலும் குறைகூறப்பட்டுள்ளது. அது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு சட்டமாகும். இந்தச் சட்டத்தின்கீழ் எவ்வாறு யாரும் சட்டபூர்வமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட முடியும்;? இந்தச் சட்டத்தின்கீழ் எவ்வாறு யாரும் சட்டபூர்வமாக குற்றஞ் சாட்டப்பட முடியும்? இந்தச் சட்டத்தின்கீழ் எவ்வாறு யாரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட முடியும்? இந்தச் சட்டம் அநீதியானது, தீமையானது, இந்த நாட்டின் சட்டப் புத்தகத்தில் இருக்க வேண்டிய ஒரு சட்டமல்ல என்பதை உங்கள் அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றமையினால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்தாகும். இது நீக்கப்பட வேண்டியதொரு சட்டமாகும். எனவே, இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் - அவர்களுடைய தற்போதைய நிலைமை எவ்வாறிருப்பினும், எந்தக் குற்றங்களுக்காக அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு அல்லது குற்றஞ் சாட்டப்படாமல் இருப்பினும், அத்துடன் அவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பினும் கூட, தீய சட்டமொன்றின்கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்பதும் அதற்கான காலம் இப்போது வந்துவிட்டது என்பதும் எனது பலமான கருத்துச் சமர்ப்பணமாகும்.
ஐயா, இந்த ஆட்களுள் சிலர் பாரதூமான குற்றங்கள் புரிந்துள்ளனர் என்று சில சமயங்களில் கூறப்படுகிறது. அவர்களுள் பெரும்பாலானவர்கள் இன்று வரை அத்தகைய பாரதுரமான குற்றம் புரிந்தமைக்காக குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படாதுள்ளனர். எனினும், அவர்கள் எந்தச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்களோ, அந்தச் சட்டமும் அதன்;கீழ் ஒரு நபரைக் கைது செய்தல், ஒரு நபரை விசாரணை செய்தல், ஒரு நபருக்கெதிராக வழக்குத் தொடர்தல் மற்றும் அந்த நபர் தொடர்பான தீர்ப்பொன்றிற்கு வருதல் தொடர்பான நடைமுறையும் குறைபாடுடையவையாயின், அந்த நபர்கள் நிச்சயமாக விடுவிக்கப்பட வேண்டும.; அந்தச் சட்டம் இயற்கை நீதிக்கு இயைபானதாக அமையுமா? குற்றம் பாரதூரமானதாக இருந்தாலென்ன, இல்லாவிட்டலென்ன? அது ஒரு பாரதூரமான குற்றமாக இருக்கலாம், அவ்வளவு பாரதூரமற்றதாக இருக்கலாம். ஆனால், இங்கே உண்மை என்னவெனில், எந்தச் சட்ட ஏற்பாடுகளின்; கீழ் அந்த நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அந்தச் சட்ட ஏற்பாடுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல என்பதேயாகும். சட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்லவென்றால், ஐயா, அந்த ஆட்கள் விடுவிக்கப்படவேண்டும் என்பதும் இந்த விடயத்தை நடுநிலைநின்று புறவயமாக பார்க்கவேண்டிய கட்டாய தேவையொன்று உண்டு என்பதும் எனது மிகப் பலமான கருத்துச் சமர்ப்பணமாகும். வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு விதமாக நடத்தப்பட்டிருப்பதுதான் இங்கு மிகவும் மோசமான ஒன்றாகும். வழமையாக நான் ஆட்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. அவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால், கைதிகள் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள்: "கேபி. க்கு எதிராக ஏன் குற்றஞ் சுமத்தப்படவில்லை? அவர் முன்னைய அரசாங்கத்திற்கு வேண்டப்பட்ட ஒருவர். அவர் தற்போதைய அரசாங்கத்திற்கும் வேண்டப்பட்ட ஒருவரா? அரசாங்கம் அவருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளாததேன்? அவர் சர்வதேச இண்டர்போல் பொலீசாரின் தேடப்படுவோர் பட்டியலிலுள்ள ஒருவராக இருப்பதாக நம்பப்படுகிறது. ;
அவர் இந்த நாட்டிற்குள் ஆயுதங்களைக் கடத்தி வந்த ஒருவர் மாத்திரமல்ல, அவர்தான் பிரதான ஆயுதக் கொள்வனவாளராக இருந்தார். ஏனையவர்களுக்கு அதாவது, முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருக்கு கிழக்கு மாகாணதில் முதலமைச்சர் பதவி வகித்தவருக்கு என்ன நடந்தது? அவர்கள் பாரதூரமான குற்றங்கள் புரியவில்லையா? அவர்களுக்கெதிராக நீங்கள் ஏன் குற்றஞ் சுமத்துவதில்லை? சமூகத்தின் நலிவுற்று பிரிவினரிலிருந்து சில இளைஞர்களையும் மக்களையும் நீங்கள் பிடித்து பயங்கரவாதத் தடுப்பபுச் சட்டத்தின்கீழ் அவர்களைத் தடுத்து வைக்கிறீர்ர்கள். இது இனியும் தொடர வேண்டுமென நான் நினைக்கவில்லை. "ஏனையவர்கள் புரிந்த குற்றங்களைவிட நாங்கள் புரிந்த குற்றம் எவ்வாறு கூடிய பாரதூரமானதாக இருக்க முடியும்?" என்பதை அற்pந்துகொள்ள இந்தக் கைதிகள் விரும்புகின்றனர். 1971 இல்; ஆயுதப் புரட்சியொன்று இடம்பெற்றது. 1988 - 1989 களிலும் புரட்சியொன்று இடம்பெற்றது. பெரும்; எண்ணிக்;கையிலானோர் அப்போது கைது செய்யப்பட்டனர். காலப்போக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்;;. வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மன்னிப்பளிக்கப்பட்டது. அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியொன்றை நடத்தினர். எனினும் நீங்கள் அவர்களை மன்னித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள். எந்தச் சட்டத்தின் கீழ் நீங்கள் இ;ந்த ஆட்களை தடுத்து வைத்திருக்;கிறீர்களோ, அந்தச் சட்டம் உள்நாட்டு நியமங்களுக்கமையவோ அல்லது சர்வதேச நியமங்களுக்கமையவோ இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கு அமைவானதொரு சட்டமல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களை இனியும் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை நீங்கள்; எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? எனவே, ஐயா, இந்த ஆட்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று நான் மிக உறுதியாக வலியுறுத்துகிறேன். இக் கைதிகளின் சார்பாக இந்த விடயத்தை இந்தச் சபையில் எழுப்புவது எமது கடமையாகும்.
இந்த விடயந் தொடர்பாக உறுதியாகச் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் விருப்பமின்மையை தமிழ் மக்கள் நல்லிணக்கச் செயன்முறைக்கான ஒரு பெருந் தடையாகவே பார்க்கின்றனர். மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம்கூட தடுப்புக் காவலிலிருந்த 11,000 பேரை விடுவித்தது. அந்த அரசாங்கம் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து விடுவித்தது. எனினும் இந்த அரசாங்கம் அதன் கடந்த 18 மாத அல்லது அதற்குக் கூடிய காலப்பகுதியில் நாங்கள் எதிர்பார்த்தளவு துரிதமாக இந்த விடயத்தில் செயல்படவில்லை.
இன்று பிற்பகல் நானும் எனது சக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்களும் பிரதம மந்திரியுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டோம் என்பதையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அந்தச் சந்திப்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதி அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதம மந்திரியுடன் நாங்கள் இந்த விடயம் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடினோம். மேலும் தாமதமின்றி இந்த விடயத்தை எவ்வாறு தீர்த்து வைப்பது என்ற விடயத்தை ஆராய்வதற்காக சட்டமா அதிபர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருடன் வரும் வெள்ளிக்கிழமை கூட்டமொன்று நடைபெறவிருக்கிறது. இந்த நாட்டின் சட்டப் புத்தகங்களில் இருப்பதற்குப் பொருத்தமற்றதென்று நீங்களே ஏற்றுக்கொள்கின்ற ஒரு சட்டத்தின்கீழ் இந்த நபர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கெதிராக குற்றஞ் சுமத்தப்பட்டிருப்பினும், குற்றம் சுமத்தப்படாதிருப்பினும் அல்லது அவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பபளிக்கப்பட்டிருப்பினும்கூட, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் என்பதை மிக உறுதியாக வலியுறுத்த விரும்புகிறோம்;. நீங்கள் அடிப்படையில் ஏற்றுக் கொள்வீர்களாயின், உங்களுடைய சட்டம் அவர்களை விடுதலைக்கு உரித்துடையவர்களாக்கும் ஒரு நீதியான சட்டமல்ல என்பதே எனது கருத்துச் சமர்ப்பணமாகும்.
நன்றி.
---------- Forwarded message ----------
From: Opposition Leader Media Sec <media.lo@tnapolitics.org>
Date: Thu, Aug 25, 2016 at 5:50 PM
Subject: Hon. Sampanthan's speech in Parliament
To: Balachandran Raghu <jbrbala@gmail.com>
From: Opposition Leader Media Sec <media.lo@tnapolitics.org>
Date: Thu, Aug 25, 2016 at 5:50 PM
Subject: Hon. Sampanthan's speech in Parliament
To: Balachandran Raghu <jbrbala@gmail.com>
Dear Editor,
Please refer to the attached Tamil Transcript of the speech Made by Hon. Sampanthan in Parliament on 23rd of August 2016 on Political Prisoners.
thank you
Raghu Balachandran
Media Secretary
Leader of the Opposition
Office of the Leader of the Opposition
Fax: +94 (11) 2699174
mobile: +94 773405583
__._,_.___
View attachments on the web Posted by: S Srivas <avarangal@gmail.com>
| Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.
�To join this Tamil Araichchi discussion group please send subscribe email to
tamil_araichchi-subscribe@yahoogroups.com ���
Ask your friends to join this forum by sending a subscription request mail to
tamil_araichchi-subscribe@yahoogroups.com
http://www.araichchi.com/
.............................................
Tamil-Fonts, Tamil-Software_Download
Tamil-word_processing, Tamil-eMail, Tamil-Internet)
http://www.araichchi.com/kaNiNi/index.html
.............................................
eMail setup, Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.araichchi.com/kaNiNi/index.html
..................................
tamil_araichchi-subscribe@yahoogroups.com ���
Ask your friends to join this forum by sending a subscription request mail to
tamil_araichchi-subscribe@yahoogroups.com
http://www.araichchi.com/
.............................................
Tamil-Fonts, Tamil-Software_Download
Tamil-word_processing, Tamil-eMail, Tamil-Internet)
http://www.araichchi.com/kaNiNi/index.html
.............................................
eMail setup, Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.araichchi.com/kaNiNi/index.html
..................................
.
__,_._,___
0 comments:
Post a Comment