மருதங்கேர்னி பருத்தித்தித்துறை வீதி புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரையின் சுருக்கம்.
இங்கு வருகை தந்திருக்கும் பாராளுமன்ற அவை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களுக்கும் எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வட மாகாணசபை உறுப்பினர்களுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும் மற்றும் இங்கு கூடியிருக்கும் அனைத்து பிரதேசவாசிகளுக்கும் எனது வணக்கங்கள்.
எனக்கு முதல் பேசிய அனைவரும் இந்த நாட்டில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அந்தவகையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையின் நிர்வாக குழுவில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் கிரியெல்ல முன்னிலையில் சில முக்கிய விடயங்களை கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
இன்று எமது நாட்டின் வரலாற்றிலே முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டின் அரசியலமைப்பானது புதிதாக வடிவமைக்கப்படுகின்ற ஒரு தருணத்தை நாம் எதிர் நோக்கியுள்ளோம். தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போதும் அதற்கு முன்னே உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பின் போதும் தமிழ் மக்களின் பிரேரணைகள் மற்றும் ஆலோசனைகள் உள்வாங்கப்படாமையினால் அந்த அரசியல் யாப்பு உருவாக்கங்களின் போது தமிழ் மக்களின் பங்களிப்பும் ஈடுபாடும் இருக்கவில்லை.
ஆனால் இலங்கை வரலாற்றில் சுதந்திரம் அடைந்தது முதல் இந்த நாட்டில் அதிகாரப்பரவலாக்கம் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களாவர் .
ஹம்பாந்தோட்டையில் இருந்த சிங்கள மக்கள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என கேட்கவில்லை, காத்தான்குடியில் வாழ்ந்த முஸ்லீம் மக்களும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என கோரவில்லை. மாறாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழ் மக்களே இந்த நாட்டில் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட வேண்டும் என கோரிவந்தனர் என்பதனை நாம் மறந்து விட கூடாது.
அதன் விளைவாகவே 1987ம் ஆண்டு இலங்கை யாப்பில் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்லாது முழு நாட்டிலும் அமுல் செய்யப்பட்டது.
எனவே இன்று ஒரு புதிய அரசியலமைப்பை வரைகின்ற இந்த தருணத்தில், தேசிய பிரச்சினைக்கு அரசியல் யாப்பினூடாக தீர்வு ஒன்றை எட்ட முற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்திலே, கொண்டு வரப்படுகின்ற தீர்வானது இலங்கையிலுள்ள எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்கின்ற அதேவேளை அது விசேஷமாக தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும்.
இவ்வாறு கூறுகின்ற போது தமிழ் மக்களுக்கு கூடுதலாகவும் ஏனையோருக்கு குறைவாகவும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று பொருள்படாது. மாறாக அதிகாரங்கள் எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை காண விளைகின்ற இந்த தருணத்தில் இந்த வரலாற்று பின்னணியை நாம் மறந்து விட முடியாது. ஏனெனில் இந்த வரலாற்றுப் பின்னணிதான் நாட்டில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
அது மாத்திரமல்லாமல் அதிகாரப்பகிர்விற்காக அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்கள் முன்னின்று போராடி வந்திருக்கின்றார்கள் ஆகையினால் புதிய அரசியலமைப்பின்போது அவர்களது அபிலாசைகள் கவனத்திலே கொள்ளப்பட்டு உள்வாங்கபட வேண்டியது மிகவும் அவசியமான கருமமாகும்.
எல்லோருக்கும் சமமான அதிகாரப்பகிர்வும் அரசியல் தீர்வும் எட்டப்படுகின்ற போது, அது இத்தனை வருடங்களாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு ஆதங்கங்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் தீர்வாக அமைய வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இந்த முக்கிய செய்தியினை கௌரவ அமைச்சர் அவர்கள் உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு இன்று இந்த பிரதேசத்திற்கு வருகை தந்து இந்த வீதி புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்தமைக்கு எம் மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
From: Opposition Leader Media Sec <media.lo@tnapolitics.org>
Date: Wed, Aug 24, 2016 at 12:13 PM
Subject: Hon. Sampanthan's Speech
To: Balachandran Raghu <jbrbala@gmail.com>
Posted by: S Srivas <avarangal@gmail.com>
| Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
tamil_araichchi-subscribe@yahoogroups.com ���
Ask your friends to join this forum by sending a subscription request mail to
tamil_araichchi-subscribe@yahoogroups.com
http://www.araichchi.com/
.............................................
Tamil-Fonts, Tamil-Software_Download
Tamil-word_processing, Tamil-eMail, Tamil-Internet)
http://www.araichchi.com/kaNiNi/index.html
.............................................
eMail setup, Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.araichchi.com/kaNiNi/index.html
..................................
0 comments:
Post a Comment